கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சூர்யாவின் ‘24’

கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சூர்யாவின் ‘24’

செய்திகள் 5-May-2016 10:38 AM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சூர்யாவின் ‘24’ திரைப்படம் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலியே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘24’ என்பதோடு, இதுவரை சூர்யா நடித்து வெளியாகிய படங்களை விட இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது என்பதும் ஒரு சாதனையாகும். உலகம் முழுக்க 2200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கும் ‘24’ கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் பிரபல விநியோக நிறுவனமான சோபானம் ஃபிலிம்ஸ் தான் ‘24’ படத்தின் உரிமையை கைபற்றியுள்ளது. சூர்யாவுக்கு தமிழகத்திற்கு அடுத்த படியாக ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதால் சூர்யா நடிக்கும் படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவும் ஒரு சாதனையாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;