ஐ, தெறி பட சாதனைகள் ‘கபாலி’யால் முறியடிப்பு!

ஐ, தெறி பட சாதனைகள் ‘கபாலி’யால் முறியடிப்பு!

செய்திகள் 5-May-2016 10:30 AM IST Chandru கருத்துக்கள்

யு ட்யூபில் ஒரு கோடியைத் தொட்ட முதல் தென்னிந்திய திரைப்பட டீஸர் என்ற சாதனையை ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் உருவாக்கியது. அதன் பிறகு 1 கோடி க்ளப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ பட டீஸர் இணைந்தது. இப்போது இந்தப் பட்டியலில் ரஜினியின் ‘கபாலி’ இணைந்திருப்பதோடு, தென்னிந்தியாவிலேயே அதிகமுறை பார்க்கப்பட்ட டீஸர் என்ற ‘ஐ’ டீஸர் சாதனையை முறியடித்து, அந்த இடத்திற்கு கபாலி வந்திருக்கிறது.

இத்தனைக்கும் ஐ டீஸரும், தெறி டீஸரும் ஒரு கோடி எண்ணிக்கையைத் தொடுவதற்கு பல நாட்கள் எடுத்துக் கொண்டன. ஆனால், கபாலி இதனை நான்கே நாட்களில் செய்திருப்பதுதான் சாதனையின் உச்சம். அதேபோல் யு ட்யூபில் அதிக லைக்ஸ் வாங்கிய இந்திய திரைப்பட டீஸர் என்ற சாதனை ‘தெறி’ வசம் இருந்தது. இப்போது அதையும், நான்கு நாட்களில் முறியடித்திருக்கிறது கபாலி.

கபாலி : 11.48 மில்லியன் பார்வையிடல்கள், 3.3 லட்சம் லைக்ஸ்
ஐ : 11.3 மில்லியன் பார்வையிடல்கள், 50 ஆயிரம் லைக்ஸ்
தெறி : 10.60 மில்லியன் பார்வையிடல்கள், 3 லட்சம் லைக்ஸ்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;