கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் ஆர்யாவின் கடம்பன்?

கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் ஆர்யாவின் கடம்பன்?

செய்திகள் 4-May-2016 4:55 PM IST Chandru கருத்துக்கள்

சூப்பர்குட் ஃபிலிம்ஸின் 88வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கும் இப்படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ புகழ் கேத்ரின் தெரஸா நடிக்கிறார். காடுகளின் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்யா ‘கடம்பன்’ என்ற முரட்டு ஆசாமி கேரக்டரில் நடிக்கிறார். இதற்காகத்தான் தற்போது அவருடைய உடம்பை இரும்புபோல் உருவாக்கி வைத்திருக்கிறார். கொடைக்கானலில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இம்மாத இறுதியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்குச் செல்லவிருக்கின்றனர்.

நண்பன் ஆர்யாவுக்காக ஜீவா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் ‘கடம்பன்’ என்ற பெயரையும் தலைப்பாக வைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறதாம். படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;