தம்பி ராமையா வாரிசு பட டீஸர்!

தம்பி ராமையா வாரிசு பட டீஸர்!

செய்திகள் 4-May-2016 1:02 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’. அறிமுக இயக்குனர் இன்பசேகர் இயக்கும் இப்படத்தின் ‘ஏன்டி..’ என்று துவங்கும் பாடல் மற்றும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. டி.இமான் இசையில் ‘ஏன்டி…’ பாடலை கார்த்திக், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீஸரை வருகிற 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள்! இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடிக்க, கருணாகரன் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். ‘சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் சார்பில் சிவ ரமேஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.கே.வர்மா கவனிக்க, பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;