கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்திருக்கும் ‘இறைவி’ திரைப்படம் இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் சூர்யாவின் ‘24’ படத்துடன் தியேட்டர்களில் திரையிடப்படவிருக்கிறது. நாளை மறுநாள் (மே-6) உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது சூர்யாவின் ‘24’. மிகப் பெரிய பட்ஜெட்டில் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. சூர்யாவின் ‘24’ ரசிகர்களின் மிகுந்த ஏதிர்பார்ப்பில் இருப்பதால் அந்த படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்படும் ‘இறைவி’ டிரைலர் ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்தாக அமையப் போகிறது
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...