மே-6ல் விஷ்ணுவிஷால் படப் பாடல்கள்!

மே-6ல் விஷ்ணுவிஷால் படப் பாடல்கள்!

செய்திகள் 4-May-2016 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை விஷ்ணு விஷால், எழில், ரஜினி நட்ராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு ஜி.சத்யா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் படம், ‘வெள்ளக்கார துரை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து எழில் இயக்கும் படம் இது என்பதால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு காத்திருக்கும் மற்றொரு படம் ‘இடம் பொருள் ஏவல்’. சீனுராமசாமி இயக்கியுள்ள இப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;