ஜி.வி., சித்தார்த்தை இயக்கும் ஹிட் இயக்குனர்!

ஜி.வி., சித்தார்த்தை இயக்கும் ஹிட் இயக்குனர்!

செய்திகள் 4-May-2016 10:10 AM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சசி இயக்கும் அடுத்த படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதுவரை ஒரு ஹீரோவை வைத்து இயக்கி வந்த சசி முதன் முதலாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதையை படமாக்கவிருக்கிறார். சமீபத்தில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகிய ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பேசப்பட்ட படமாகும். ‘பிச்சைக்கரன்’ தந்த பெரும் உற்சாகத்துடன் சசி அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் கூடுதல் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - இளந்தாரி பாடல் வீடியோ


;