1 கோடியை எட்டிய கபாலி : தொடரும் சாதனை வேட்டை!

1 கோடியை எட்டிய கபாலி : தொடரும் சாதனை வேட்டை!

செய்திகள் 4-May-2016 10:01 AM IST Chandru கருத்துக்கள்

‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்’ என ‘பாபா’ படத்தில் பஞ்ச் டயலாக் ஒன்றைப் பேசியிருப்பார் ரஜினி. அது அப்போது பொருந்தியதோ இல்லையோ, இன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு கச்சிதமாய்ப் பொருந்தியிருக்கிறது. 12 மணி நேரத்தில் 10 லட்சம், 24 மணி நேரத்தில் இருபது லட்சம், 5 நாட்களில் 30 லட்சம் என ரசிகர்கள் தங்கள் ஆதர்ஷ நாயகர்களின் பட டீஸர்/டிரைலர் சாதனைகளைப் பற்றி ட்விட்டரில் டிரென்ட் செய்து கொண்டிருக்க, சத்தமில்லாமல் யு டியூப்பில் நுழைந்து யுத்தம் செய்திருக்கிறார் சூப்பர்ஸ்டார்.

ஆம்... 72 மணி நேரத்திற்குள் (3 நாட்கள்) 1 கோடி பார்வையிடல்கள் கிடைத்திருக்கின்றன ‘கபாலி’ டீஸருக்கு... இந்த சாதனையை இனி முறியடிக்க வேண்டுமென்றால், அது ரஜினி, ஷங்கர் காம்பினேஷனில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘எந்திரன் 2’ படத்தால் மட்டுமே முடியும் என சத்தியம் செய்கிறார்கள் சமூக வலைதள ரசிகர்கள். 1 கோடி பார்வையிடல்கள் மட்டுமின்றி, 3 லட்சம் லைக்குகளும் இந்த டீஸருக்குக் கிடைத்திருக்கின்றன.

ஐ, தெறி படத்திற்குப் பிறகு 1 கோடியை எட்டும் 3வது டீஸராகவும் ‘கபாலி’ சாதனை படைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;