குழந்தைகளுக்கான சம்மர் ட்ரீட் - கத சொல்லப் போறோம்!

குழந்தைகளுக்கான சம்மர் ட்ரீட் - கத சொல்லப் போறோம்!

செய்திகள் 3-May-2016 12:57 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக உருவாகும் படங்கள் குறைவு! அந்த வகையில் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘கத சொல்லப் போறோம்’. கிட்டத்தட்ட 20 குழந்தைகளை நடிக்க வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நாளைய இயக்குனர் புகழ் கல்யான் இயக்கியுள்ளார். இந்த குழந்தைகளுடன் ‘ஆடுகளம்’ நரேன், காளி வெங்கட், விஜயலட்சுமி, அக்‌ஷரா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. ‘விக்டோரியா டாக்’ நிறுவனம் சார்பில் சுபாகரன் வழங்க, ரிலாக்ஸ் ஆர்ட் புரொடக்‌ஷன் சார்பில் கல்யாண் தயாரித்துள்ள இப்படத்தினை இம்மாதம் 20-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

‘‘குழுந்தைகளுக்கு மட்டும் என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் இது. பொழுதுபோக்கு அம்சங்கள் என்றில்லமல் நல்ல ஒரு கருத்தையும் இப்படம் வலியுறுத்தும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் கல்யாண். ஏற்கெனவே சில படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்துள்ள ‘ஜெனீஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் ‘கத சொல்லப் போறோம்’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காத்தாடி ட்ரைலர்


;