நாசருக்குக் கிடைக்கவிருக்கும் புதிய கௌரவம்!

நாசருக்குக் கிடைக்கவிருக்கும் புதிய கௌரவம்!

செய்திகள் 3-May-2016 12:08 PM IST Chandru கருத்துக்கள்

பிரபல கல்வி நிறுவனமான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான நாசருக்கு, அவரது கலைச் சேவையைப் பாராட்டி ‘டாக்டர் பட்டம்’ வழங்கவிருக்கிறது. வருகிற 7ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கி இந்த விழா நடைபெற உள்ளது.

தனது 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985ஆம் ஆண்டு ‘கல்யாண அகதிகள்’ என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகபடுத்தினார் இயக்குனர் பாலசந்தர். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - நீ இல்லை என்றால்


;