2 நாளில் 8 மில்லியன் : 3 கோடி சாதனையை நோக்கி ‘கபாலி’!

2 நாளில் 8 மில்லியன் : 3 கோடி சாதனையை நோக்கி ‘கபாலி’!

செய்திகள் 3-May-2016 10:45 AM IST VRC கருத்துக்கள்

மொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் சூப்பர்ஸ்டார். மே 1ஆம் தேதி காலை 11 மணியளவில் யு ட்யூப்பில் வெளியிடப்பட்ட ‘கபாலி’ டீஸர், முதல் நாள் பார்வையிடல் சாதனையில் ஷாருக்கானின் ‘தில்வாலே’ டீஸர் சாதனையையே அசால்ட்டாக தூக்கிச் சாப்பிட்டது. முதல் நாளில் மட்டுமே 50 லட்சம் பார்வையிடல்கள் இந்த டீஸருக்கு கிடைத்தது. வேறெந்த இந்திய நடிகரின் படத்திற்கும் இதுவரை இத்தனை பெரிய வரவேற்பு கிடைத்ததில்லை. பார்வையிடல் மட்டுமின்றி, முதல் நாளிலேயே ‘கபாலி’ டீஸரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘லைக்’கும் செய்தனர்.

இந்நிலையில், இரண்டாவது முடிவதற்குள்ளாகவே ‘கபாலி’ டீஸர் மேலும் 30 லட்சம் பார்வையிடல்களைப் பெற்று, தற்போது 8 மில்லியன் பார்வையிடல்களைப் பெற்று அசத்தியிருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள மொத்த லைக்குகள் 2,84,250. இந்த எண்ணிக்கை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ‘கபாலி’ டீஸர் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய சினிமா டீஸர்களில், ஷாருக்கானின் ‘தில்வாலே’ டீஸரே இதுவரை அதிகமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. 2 கோடி 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை டீஸர் கண்களிக்கப்பட்டுள்ளது. அந்த சாதனையை ‘கபாலி’ டீஸர் முறியடித்து, முதல்முறையாக 3 கோடி பார்வையிடல்கள் என்ற சாதனையைப் படைக்கும் என்பதே தற்போது சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;