‘கோ 2’வுடன் இணைந்த ‘மத கஜ ராஜா’

‘கோ 2’வுடன் இணைந்த ‘மத கஜ ராஜா’

செய்திகள் 3-May-2016 10:16 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சில பல நிதிப் பிரச்சனைகள் காரணமாக இத்தனை நாட்களாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்த இப்படம், கடந்த சில வாரங்களாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நாளிதழ்களிலும் ரிலீஸ் தேதியுடன் ‘மத கஜ ராஜா’ விளம்பரங்கள் வெளியாகின.

ஏப்ரல் 29ஆம் தேதியே வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மத கஜ ராஜா’ ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளியது. இந்நிலையில், இப்படத்திற்கு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். வரும் 13ஆம் தேதி வெளியாகும் ‘கோ 2’வுடன் ‘மத கஜ ராஜா’வும் இணைந்துள்ளது. இந்தமுறை கண்டிப்பாக இப்படம் வெளியாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறது விஷால் தரப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;