‘சபாஷ் நாயுடு’வுக்குப்பிறகு மீண்டும் இணையும் ‘தூங்கவனம்’ டீம்?

‘சபாஷ் நாயுடு’வுக்குப்பிறகு மீண்டும் இணையும் ‘தூங்கவனம்’ டீம்?

செய்திகள் 3-May-2016 10:10 AM IST Chandru கருத்துக்கள்

பிரெஞ்சு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து கமல் தற்போது டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இம்மாதத்தில் ஸ்ருதிஹாசன், கமல் உட்பட மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக அமெரிக்கா பறக்கிறது. 80% படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஜுன் இறுதியில் இந்தியாவிற்கு வந்து, பின் இந்தியாவில் 20% படப்பிடிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மொத்த படத்தையும் ஜூலைக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.

இதனைத் தொடர்ந்து ‘தூங்காவனம்’ ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் கமல். கமலிடம் பணியாற்றிய ராஜேஷ், தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூஸராகவும் இருக்கிறார். கமல், ராஜேஷ் மீண்டும் இணையும் படத்தின் வேலைகள் ஆகஸ்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;