சூர்யாவின் ‘24’ படத்திற்கு பிரம்மாண்ட ஓபனிங்!

சூர்யாவின் ‘24’ படத்திற்கு பிரம்மாண்ட ஓபனிங்!

செய்திகள் 3-May-2016 9:59 AM IST Chandru கருத்துக்கள்

சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் என்ற பெருமையோடு வரும் 6ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ‘24’ திரைப்படம். சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். டீஸர், டிரைலர், பாடல்கள் ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இப்படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தின் புரமோஷன்களை 2 வாரத்திற்கு முன்பே அதிரடி துவங்கிவிட்டதால், அந்த எதிர்பார்ப்பு மேலும் பன்மடங்காகியிருக்கிறது.

இந்நிலையில், 24 படத்திற்கான முன்பதிவுகள் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் ஞாயிற்றுக்கிழமையே துவங்கிவிட்டது. அதோடு, சத்யம் சினிமாஸில் ‘பிரீ புக்கிங்’ கடந்த வாரமே துவங்கி, முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே தீர்ந்துவிட்டன. நாளைமுதல் எஞ்சியுள்ள அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவுகள் துவங்கிவிடும்.

உலகமெங்கும் 2200க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘24’ திரைப்படம் வெளியிடப்படுவதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;