நிதின் சத்யாவின் பாண்டியனோட கலாட்டா தாங்கல!

நிதின் சத்யாவின் பாண்டியனோட கலாட்டா தாங்கல!

செய்திகள் 3-May-2016 9:53 AM IST VRC கருத்துக்கள்

விகோசியா மீடியா தயாரிப்பில் எஸ்.டி.குணசேகரன் இயக்கி வரும் படம் ‘பாண்டியனோட கலாட்டா தாங்கல’. இப்படத்தில் நிதின் சத்யா, ரக்‌ஷா ராஜ் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, சிங்கம் புலி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா முதலானோரும் நடிக்கிறார்கள்.

‘‘இப்படம் நகைச்சுவையும் திகிலும் கலந்த படமாக உருவாகியுள்ளது. பாண்டி எனும் குரங்கு கதாபாத்திரத்தை நோக்கிதன் இப்படத்தின் கதை நகரும். எதிர்பாராதவிதமாக இறந்துபோன ஒரு நபரின் ஆவி தான் இந்த பாண்டி! அவரை சுற்றி இருக்கும் நபர்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் திகிலும், நகைச்சுவையும் கலந்து கூறி உள்ளோம். சுரேஷின் ஒளிப்பதிவும், சுகுமாரின் இசையும் இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது’’ என்கிறார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நிதின் சத்யா. இப்படத்தை இம்மாதம் 13 ஆம் தேதி திரைக்கு கொண்டுவருவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;