ஜப்பானில் உருவாகியுள்ள 3டி படம்!

ஜப்பானில் உருவாகியுள்ள 3டி படம்!

செய்திகள் 3-May-2016 9:47 AM IST VRC கருத்துக்கள்

‘அம்புலி 3டி’ ‘ஆ’ ஆகிய படங்களை இயக்கிய ஹரி, ஹரிஷ் இயக்கியுள்ள படம் ‘ஜம்புலிங்கம் 3டி’. இந்த படத்தில் கோகுல், அஞ்சனா ஜோடியாக நடிக்க இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் குறித்து இயக்குனரக்ள் ஹரி, ஹரிஷ் கூறும்போது, ‘‘சமீபத்தில் வெளியான ‘ஜங்கிள் புக்’ திரைப்படம் அனைத்து ரக ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஜங்கிள் புக்’ படத்தை போன்று இப்படமும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கிறது. நாளைய சினிமா இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை சார்ந்துதான் பயணிக்கும். அந்த வகையில் 3டியில் வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகியிருக்கும் ‘ஜம்புலிங்கம் 3டி’ திரைப்படம் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை இம்மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;