இந்தியாவின் முதல் PHILANTHROPIC படம்!

இந்தியாவின் முதல் PHILANTHROPIC படம்!

செய்திகள் 2-May-2016 5:24 PM IST VRC கருத்துக்கள்

கிரௌட் ஃபண்டிங் முறையில் தயாராகி பெரும் வெற்றிபெற்ற கன்னட படம் ‘லூசியா’. இப்படத்தைப் போன்று தமிழிலும் கிரௌட் ஃபண்டிங் முறையில், அதாவது 35-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘சதுரம்-2’. இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் யோக் ஜாப்பி, ரோஹித் நாயர், ரியாஸ், சுமன் ஷெட்டி, சுஜா வாருன்னி, கௌஷிக் முதலானோர் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது,

‘‘இது இந்தியாவின் முதல் PHILANTHROPIC திரைப்படமாகும். PHILANTHROPIC என்றால் சமூகத்தில் நம் கண் முன் நடைபெறும் சில சம்பவங்களை பார்க்கும்போது அதை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணமும் கோபமும் நமக்குள் ஏற்படும். அப்படி ஏற்படுகிற உணர்வுக்கு PHILANTHROPIC என்று அர்த்தம்! இதை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது! ஹாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘SAW’ திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீ-மேக் தான் இப்படம்’’ என்றார். ‘Knockout Entertainment’ என்ற பேனரில் உருவாகி வரும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;