திருக்குமரன் என்டர்டெயின்மென்டின் மற்றுமொரு புதிய முயற்சி!

திருக்குமரன் என்டர்டெயின்மென்டின் மற்றுமொரு புதிய முயற்சி!

செய்திகள் 2-May-2016 4:48 PM IST VRC கருத்துக்கள்

‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து, பல திறமையானவர்களை அறிமுகப்படுத்திய ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனம் தற்போது சிறந்த கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து ஆன்லைனில் வெளியிடவுள்ளது. இதன் முதல் கட்டமாக, அம்ஜத் மற்றும் லக்ஷ்மி ப்ரியா நடித்துள்ள ‘இஃக்லூ’ என்னும் படத்தை வரும் ஜூன் மாதம் ஆன்லைனில் வெளியிட ஆயுத்தமாகியுள்ளது. ‘ஸ்ரீ ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்ரீ & ஸ்ரீ புரொடக்ஷன்’ தயாரித்து பரத்மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைப்பும், குகன் எஸ். பழனி ஒளிப்பதிவும் செய்துள்ளனர். படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்க கலை இயக்கத்தை விஜய் ஆதிநாதன் கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

54321 - டிரைலர்


;