களம் – விமர்சனம்

பழைய களம்!

விமர்சனம் 2-May-2016 3:59 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Robert Raj
Production : Arul Movies
Starring : Amjath Kahan, Lakshmi Priya, Pooja, Sreenivasan, Madhu Soodhanan
Music : Prakash Nikki
Cinematography : Mukesh
Editing : Prabhakaran

‘A LOGICAL HORROR FILM’ என்ற அறிவிப்புடன் வெளியாகியிருக்கும் ‘களம்’ நிஜத்தில் எப்படி?

கதைக்களம்

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதுசூதனன் போலி தஸ்தாவேஜுகளை தயாரித்து ஒரு ஜமீன் வீட்டை அபகரிக்கிறார். அந்த வீட்டை புதுப்பித்து அமெரிக்காவில் இருந்து வரும் தன் மகன் அம்ஜத், மருமகள் லட்சுமி ப்ரியா, பேத்தி ஹியா ஆகியோரை அதில் தங்க வைக்கிறார். அந்த வீட்டில் சில அமானுஷங்கள் நடப்பதை உணர்கிறார் லட்சுமி ப்ரியா. அதனை அந்த வீட்டுக்கு வரும் வீட்டு அலங்கார நிபுணரான பூஜாவும் உணர்கிறார். ஆரம்பத்தில் இதையெல்லாம் நம்ப மறுக்கும் அம்ஜத்துக்கும் ஒரு கட்டத்தில் அந்த அமானுஷ அனுபவங்கள் ஏற்பட, அந்த தீய சக்திகளை விரட்ட பூஜா மூலம் நகுலன் (ஸ்ரீனிவாசன்) என்ற மந்திரவாதி வரவழைக்கப்படுகிறார். அதன் பிறகு அந்த பிரச்சனையிலிருந்து அனைவரையும் நகுலனால் காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு விடை தருகிறது ‘களம்’.

படம் பற்றிய அலசல்

அந்த ஜமீன் வீட்டில் 1920 காலகட்டத்தில் வயதான ஒருவர் கல்லறையில் விளகேற்றி வைத்து விட்டு தூக்குப் போட்டு இறந்து விடுவது போலவும், பிறகு 1985-ல் 40 வயதுடைய ஒருவர் குழந்தைகளுக்கு சீட்டுக் கட்டுகளை வைத்து மேஜிக் செய்து காட்டுவது போலவும் படம் துவங்குகிறது. ஒரு வித்தியாசமான கதை களத்தில் படம் பயணிக்கப் போகிறது என்று நிமிர்ந்து உட்காந்தால் நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் வரும் சம்பவங்கள் அத்தனையும் வழக்கமாக பேய் படங்களில் வரும் காட்சிகள் மாதிரியே அமைந்திருப்பதால் ரசிக்க முடியவில்லை. இடைவேளை வரை மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் சூடு பிடிப்பதோடு கதையில் ஏற்படும் சில திருப்பங்களும் ரசிக்க முடிகிறது. ஆனால் படத்தின் கிளைமேக்ஸ் ஏற்கெனவே வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு படத்தின் கிளைமேக்ஸை ஞாபகப்படுத்துவது போல அமைந்திருப்பதால் அது களத்திற்கு பெரிய மைனஸாக அமைந்துவிட்டது. படத்தில் பங்காற்றிய அத்தனை கலைஞர்களையும் அருமையாக வேலை வாங்கிய அறிமுக இயக்குனர் ராபர்ட் ராஜ், ரசிக்கும் படியான ஒரு திரைக்கதை அமைப்பதில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். மற்ற படி பிரகாஷ் நிக்கியின் பின்னணி இசை, முகேஷின் ஒளிப்பதிவு உட்பட பெரும்பாலான டெக்னிக்கல் விஷயங்களும் களத்திற்கு கை கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

அம்ஜத், லட்சுமி ப்ரியா, மதுசூதனன், நாசர், பூஜா, பேபி ஹியா என படத்தில் பங்காற்றியவர்கள் அனைவரும் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறாகள்.

பலம்

1.கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு
2.பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.சுவாரஸ்யமில்லாத திரைக்கதை
2. மிகவும் மெதுவாக பயணிக்கும் முதல் பாதி!
3. கிளைமேக்ஸ்!

மொத்தத்தில்

ஹாரர் பட வரிசையில் பத்தோடு பதினொன்றாக வெளிவந்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இன்னும் ரசிக்கும் படி அமைத்திருந்தால் களத்திற்கு ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்திருக்கும்.

ஒருவரி பஞ்ச் : பழைய களம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;