திருமண புரளி - பூனம் பஜ்வா மறுப்பு!

திருமண புரளி - பூனம் பஜ்வா மறுப்பு!

செய்திகள் 2-May-2016 10:32 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு திருமணம் நடந்ததாக செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை பூனம் பாஜ்வா சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், ‘‘எனக்கு திருமணம் நடந்தது என்பது முற்றிலும் தவறான செய்தியாகும். சமீபத்தில் எனது தங்கைக்கு தான் திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும்போது, அதை இந்த உலகமே அறியும் வகையில் வெகு சிறப்பான முறையில் நடைபெறும்'’’ என்று தெரிவித்துள்ளார். பூனம் பஜ்வா தற்போது சுந்தர்.சி.யுடன் இணைந்து ‘குண்டு கத்தரிக்காய்’ படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;