ஜூன் 3-ல் ‘ஒரு நாள் கூத்து’

ஜூன் 3-ல் ‘ஒரு நாள் கூத்து’

செய்திகள் 2-May-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் தயாரித்திருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் அனைத்தும் வேலைகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்று, சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களுடன் படத்திற்கு ‘யு’ சான்றிதழும் கிடைத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த படக்குழுவினர் இப்படத்தை அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி ரீலிஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். திருமணம் பற்றிய கதை ‘ஒரு நாள் கூத்து’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;