ஒரே நாளில் ‘கபாலி’யை தரிசித்த 50 லட்சம் பேர்!

ஒரே நாளில் ‘கபாலி’யை தரிசித்த 50 லட்சம் பேர்!

செய்திகள் 2-May-2016 9:49 AM IST Chandru கருத்துக்கள்

‘மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ரஞ்சித், தன் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. அதோடு இப்படத்தில் அவர் இன்டர்நேஷனல் டானாக நடிக்கிறார் என்ற செய்திகள் வேறு ‘கபாலி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக்கியது. படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்திலிருக்கும் ‘கபாலி’ படத்தின் டீஸர் நேற்று காலை 11 மணியளவில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. ரஜினியின் மாஸ் வசனங்களுடன் உருவாகியுள்ள இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த டீஸர் வெளியாகி 23 மணி நேரத்திற்குள்ளாகவே 50 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. இந்திய அளவில் இது ஒரு புதிய சாதனை. அதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டீஸரை ‘லைக்’கும் செய்துள்ளார்கள். இதுவும் ஒரு சாதனைதான். இதுவரை, யு ட்யூப்பில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த இந்திய சினிமா படங்களின் டீஸர்/டிலைரர் சாதனைகளை ‘கபாலி’ முறியடித்துள்ளதாக ரசிகர்கள் ‘மகிழ்ச்சி’யில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;