அன்பானவன், அசராதவன், அடங்காதவன் : சிம்புவின் அடுத்த அதிரடி!

அன்பானவன், அசராதவன், அடங்காதவன் : சிம்புவின் அடுத்த அதிரடி!

செய்திகள் 1-May-2016 10:34 AM IST Chandru கருத்துக்கள்

தீவிர அஜித் ரசிகரான சிம்பு, அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தனது ரசிகர்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவார். அந்தவகையில், அஜித்தின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது புதிய படத்தின் டைட்டில் ஒன்றை அறிவிக்கவிருப்பதாக நேற்று மாலை முதல் ட்விட்டரில் டிரென்ட் செய்து வந்தார். ‘AAA’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்த அந்தப் படத்தின் டைட்டிலை, சொன்னபடியே நேற்று நள்ளிரவு 12.01 மணியளவில் ட்விட்டர் மூலம் அறிவிப்பு செய்தார். படத்தின் பெயர் அன்பானவன், அசராதவன், அடங்காதவன்.

சர்ச்சைப் படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தை தனது 2வது படமாக இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். க்ளோபல் என்டர்டெயின்மென்ட் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறதாம். தற்போது படத்தில் நடிக்கவிருக்கும் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம். சிம்புவுக்கு ஸ்பெஷல் மேக்அப் போடுவதற்காக ‘ஐ’ படப்புகழ் ‘வேட்டா’ நிறுவனத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இன்று வெளியாகியிருக்கும் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘ஆண்டவன்தான் ஓட்டுறான்... உன்னையும் போட்டு ஆட்டுறான்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;