பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல!

செய்திகள் 1-May-2016 10:34 AM IST Chandru கருத்துக்கள்

1971, மே 1-ல் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சுப்பிரமணியன் &- மோகினி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் அஜித். சென்னையில் படித்து வளர்ந்த இவருக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை! அதனால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பைக் மெக்கானிக்காகவும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கிறார்.

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து, சினிமா வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் போரட்டத்துடனையே எதிர்கொண்டு, தமிழ்த் திரையுலகில், தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி, அவர்கள் மனதில் நிலைத்திருப்பவர் அஜித்.

உலகமே ‘உழைப்பாளர் தின’த்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அந்த நாள் ‘தல பிறந்தநாள்’ என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளை தல ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். மன்றங்களை கலைத்த பிறகும் இது தொடர்வதுதான் அஜித்தின் தனிச்சிறப்பே.

இன்று அஜித்தின் 45வது பிறந்தநாள். சமூக வலைதளங்களை வாழ்த்துக்களால் அதிரடித்துக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். அதோடு, தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேதாளம்’ சிறப்புக்காட்சி இன்று திரையிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளின் சில தியேட்டர்களிலும்கூட ‘வேதாளம்’ சிறப்புக் காட்சி ஒளிபரப்பாகுகிறதாம். வழக்கம்போல், ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்றை உலகளவில் டிரென்ட் செய்துகொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

‘வேதாளம்’ ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் ‘தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ அஜித் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;