கௌதம் படத்தில் இணைந்து ஆடும் சிம்பு, தனுஷ்?

கௌதம் படத்தில் இணைந்து ஆடும் சிம்பு, தனுஷ்?

செய்திகள் 30-Apr-2016 2:53 PM IST Chandru கருத்துக்கள்

சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’, தனுஷை நாயகனாக்கி ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இரண்டு நாயகர்களின் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இரண்டு படங்களுமே விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. கௌதமுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்த நமக்கு கிடைத்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று, இந்த எதிர்பார்ப்பை இன்னும் பன்மடங்காக்கலாம்.

ஆம்... ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் தனுஷூடன் இணைந்து சிம்புவையும் பாடல் ஒன்றில் நடனமாட வைக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் கௌதம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடனத்திற்கென்றே பெயர்போனவர்கள் தனுஷும் சிம்புவும். குத்து டான்ஸில் தனுஷ் தூள் கிளப்பினால், வெஸ்டர்னில் வெளுத்து வாங்குவார் சிம்பு. இப்போது இரண்டு பேரும் இணைந்து ஆடவிருக்கும் பாடல் வெஸ்டர்ன் குத்துவாக இருக்குமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;