பகலில் ஜொலிக்கவிருக்கும் ‘கபாலி’ நட்சத்திரம்!

பகலில் ஜொலிக்கவிருக்கும் ‘கபாலி’ நட்சத்திரம்!

செய்திகள் 30-Apr-2016 11:32 AM IST Chandru கருத்துக்கள்

மீண்டும் சூப்பர்ஸ்டார் தரிசனம்.... நகம் கடித்துக் காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ‘மெட்ராஸ்’ தந்த ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி எப்படியிருப்பார், என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்? என தங்களுக்குள் யோசித்துக் கொண்டே நாளைய தினத்திற்காக அனைவரும் வெயிட்டிங். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில் ரஜினி இன்டர்நேஷனல் டானாக நடிப்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக் கிடக்கிறது.

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி கபாலி டீஸர் வெளிவரும் என சில நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலை 11 மணியளவில் தன்னுடைய யு டியூப் சேனலில் டீஸரைக் காணலாம் என தயாரிப்பாளர் தாணுவே ட்வீட் செய்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் நாளைய 11 மணிக்காக இப்போதே தவம் கிடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பொதுவாக பெரிய படங்களின் டீஸர், டிரைலர்களை மாலை நேரத்தில் அல்லது நள்ளிரவு 12 மணியளவிலேயே வெளியிடுவார்கள். ஆனால், ‘கபாலி’ நட்சத்திரம் பகலிலேயே உதிக்கவிருப்பதால் கூடுதல் உற்சாகத்திலிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;