சுதந்திர தினத்தை குறிவைக்கும் ‘இருமுகன்’

சுதந்திர தினத்தை குறிவைக்கும் ‘இருமுகன்’

செய்திகள் 30-Apr-2016 11:08 AM IST Chandru கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம். நயன்தாரா, நித்யாமேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் 70% படப்பிடிப்பு வேலைகள் முடிடைந்துவிட்டன. சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது. கெமிக்கல் சம்பந்தப்பட்ட சயின்ஸ் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ‘புலி’ ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸுக்குத் தயாராகி வரும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் மசாலா படம், அஞ்சல, உப்புக்கருவாடு, உனக்கென்ன வேணும் சொல்லு போன்ற படங்களை ரிலீஸ் செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;