ஸ்ருதிஹாசனுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மானின் நாடக நாயகன்!

ஸ்ருதிஹாசனுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மானின் நாடக நாயகன்!

செய்திகள் 29-Apr-2016 11:16 AM IST Chandru கருத்துக்கள்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு திரைக்கதை, வசனம் கமல் எழுத, டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிறது. இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு ஜெயகிருஷ்ணா கும்மாடி, எடிட்டிங்கிற்கு ஜேம்ஸ் ஜோசப் ஆகியோர் கைகோர்த்துள்ளார்கள். ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூஸராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படத்தில் கதையின் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, அவருடன் இணைந்து ஏர்.ஆர்.ரஹ்மானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாடகத்தில் நடித்த மனு நாராயணன் நடிக்கிறார். இவர்களுடன் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன், சௌரப் சுக்லா, ஆனந்த் மகாதேவன், சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மே 16ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்குகிறது. 80% படப்பிடிப்பு வேலைகளை அங்கே முடித்துவிட்டு, மீதமுள்ள 20% படப்பிடிப்புகளை இந்தியாவில் ஜூலையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கமல். ஹ்யூமர் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு தமிழ், தெலுங்கில் ‘சபாஷ் நாயுடு’ என்றும், ஹிந்தியில் ‘குண்டு நாயுடு’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;