இப்போதைய சினிமா வியாபாரத்தில் சென்சாரில் கிடைக்கும் சான்றிதழுக்கும் ஒரு சிறிய பங்குண்டு. அனைவரும் வந்து பார்க்கும் வகையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்க வேண்டும், அரசிடமிருந்து வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் தலைப்பையும், படத்திலுள்ள காட்சிகளையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறார்கள். அந்தவகையில் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தனது முதல் இரண்டு படைப்புகளையுமே தரமானதாக வழங்கியிருப்பதால் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததோடு, வரிச்சலுகையையும் பெற்றுள்ளது. 36 வயதினிலே, பசங்க 2 படங்களைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு 24.
விக்ரம்குமார் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் இந்த அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் நேற்று சென்சாருக்குச் சென்றது. படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘24’க்கு யு சான்றிதழ் வழங்கி அனைத்து ரசிகர்களும் பார்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். சென்சாரில் ஹாட்ரிக் யு வாங்கிய சந்தோஷத்திலிருக்கிறது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...