பல்ராம் நாயுடு வெர்ஷன் 2.0!

பல்ராம் நாயுடு வெர்ஷன் 2.0!

செய்திகள் 29-Apr-2016 10:24 AM IST Chandru கருத்துக்கள்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘சபாஷ் நாயுடு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ படத்தில் கமல் ஏற்றிருந்த 10 கேரக்டர்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த கேரக்டர் பல்ராம் நாயுடு. அந்த கேரக்டரையே முக்கிய கதாபாத்திரமாக்கி இந்த ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகிறது. இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு ஜெயகிருஷ்ணா கும்மாடி, எடிட்டிங்கிற்கு ஜேம்ஸ் ஜோசப் ஆகியோர் கைகோர்த்துள்ளார்கள். ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூஸராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் காமெடி நடிகர் பிரம்மானந்தமும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசனும் இப்படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;