கமல் இரண்டரை லட்சம், லைக்கா ஒரு கோடி - குவியும் நன்கொடை!

கமல் இரண்டரை லட்சம், லைக்கா ஒரு கோடி - குவியும் நன்கொடை!

செய்திகள் 29-Apr-2016 10:17 AM IST Chandru கருத்துக்கள்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ், லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு இரண்டொரு நாட்களாக இணையதளங்களில் சுற்றி வருகிறது. அப்படத்தின் துவக்கவிழா தற்போது நடிகர் சங்கத்தின் இடத்தில் நடைபெற்று வருகிறது. நடிகர் சங்கத்தின் இடத்தை மீண்டும் கைப்பற்றிய பிறகு நடக்கும் முதல் விழா இது என்பதால், திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதோடு, இந்த விழாவிற்காக ‘தற்காலிக ஏசி ஹால்’ ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டரை லட்சம் ரூபாய் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கியிருக்கிறாராம் நடிகர் கமல்ஹாசன். இதே விழாவில், 1 கோடி ரூபாய் நன்கொடை தருவதாக லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அறிவித்திருக்கிறதாம். இதைப்போல் தொடர்ந்து நடிகர் சங்க வளாகத்தில் நடத்தப்படும் விழாக்களின் மூலம் கிடைக்கப்பெறும் நன்கொடையை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;