சூர்யாவின் ஒவ்வொரு படத்திற்காக ஒதுக்கப்படும் தியேட்டர்கள் எண்ணிக்கையும், அவரின் முந்தைய சாதனைகளை முறியடித்து வருகிறது. அந்தவகையில் விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘24’ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தியேட்டர்கள் எண்ணிக்கை இதற்கு முந்தைய சூர்யா பட எண்ணிக்கைகள் அனைத்தையும் முறியடிக்கும் எனத் தெரிகிறது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.
மே 6ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக இதுவரை 2150க்கும் அதிகமான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மட்டுமே 300க்கும் அதிகமான திரையரங்குகள் ‘24’ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறியுள்ளார் ஞானவேல் ராஜா. இப்படத்தின் சென்னை சிட்டி வெளியீட்டு உரிமையை ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனமும், மதுரை ஏரியவை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாம்.
‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ (‘என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா’ என்ற பெயரில் தமிழிலும்...
‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவிஅரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ்,...
‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ என்ற தெலுங்கு படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை...