தன் பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை மனதில் வைத்து ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தைத் துவங்கிய சூர்யாவின் முதல் தயாரிப்பு ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’. விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ படத்தை தனது 2வது தயாரிப்பாக உருவாக்கி வெளியிட்டது இந்நிறுவனம். இப்படங்களைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்திருக்கும் ‘24’ படத்தையும் தற்போது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே தயாரித்துள்ளது.
சூர்யாவின் தயாரிப்பில் உருவான முதல் மூன்று படங்களின் தலைப்பியிலும் ‘நம்பர்கள்’ இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சூர்யாவின் நம்பர் கணக்கு அவருக்கு ராசியாக அமைந்துள்ளது என இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘24’ பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்ராம்.
‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ (‘என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா’ என்ற பெயரில் தமிழிலும்...
‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ என்ற தெலுங்கு படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை...
ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினிகாந்த் நடிக்க ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின்...