மே 2வது வாரத்தில் ‘தொடரி’ வெள்ளோட்டம்!

மே 2வது வாரத்தில் ‘தொடரி’ வெள்ளோட்டம்!

செய்திகள் 28-Apr-2016 10:38 AM IST Chandru கருத்துக்கள்

‘தங்கமகன்’ படத்திற்குப் பிறகு தற்போது ஹாலிவுட் படம் உட்பட 5 படங்களில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இதில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தொடரி’ படத்திற்காக சமீபத்தில் 10 மணி நேரத்தில் தன் பங்கு டப்பிங் முழுவதையும் முடித்துக் கொடுத்து படக்குழுவினரை அசத்தியுள்ளார் தனுஷ். இந்நிலையில், ‘தொடரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை மே 2வது வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். தற்போது டீஸரை உருவாக்கும் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ரயிலில் உணவு சப்ளை செய்பவராக ‘பூச்சியப்பன்’ எனும் கேரக்டரில் இப்படத்தில் தனுஷ் நடிக்க, சரோஜா எனும் ‘டச்அப்’ பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் காதலை முழுக்க முழுக்க ரயில் பயணத்திலேயே பிரபுசாமன் படமாக்கியிருப்பதால் படத்திற்கு ‘தொடரி’ (ரயில்) என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ பாடல்கள் மே மாதத்திலேயே வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;