‘தெறி’க்காக பிரத்யேக ஷோ ஒதுக்கிய விஜய்!

நண்பன் லாரன்ஸின் வேண்டுகோள் : ‘தெறி’க்காக பிரத்யேக ஷோ ஒதுக்கிய விஜய்!

செய்திகள் 28-Apr-2016 10:23 AM IST Chandru கருத்துக்கள்

தன் அறக்கட்டளையின் கவனிப்பில் வளரும் 60 குழந்தைகள் ‘தெறி’ படம் பார்க்க ஆசைப்படுவதாக ‘இளையதளபதி’ விஜய்யிடம் சமீபத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். சென்னையின் ஏதாவது ஒரு தியைரங்கில் 60 டிக்கெட்டுகள் ஒதுக்கிக் கொடுப்பார் விஜய் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாரன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய். ஆம்... 60 குழந்தைகளும் தனியாக அமர்ந்து ‘தெறி’ படத்தை ரசிக்கும் வண்ணம் சென்னை ஏவிஎம் பிரிவியூ தியேட்டரில் பிரத்யேக ஷோ ஒன்றை ஒதுக்கிக் கொடுத்துள்ளார் விஜய். அத்தனை குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தியதற்காக தனது நண்பன் விஜய்க்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;