ஈசிஆரில் பிரம்மாண்ட செட் : எந்திரன் 2 புதிய தகவல்கள்!

ஈசிஆரில் பிரம்மாண்ட செட் : எந்திரன் 2 புதிய தகவல்கள்!

செய்திகள் 28-Apr-2016 10:14 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் ‘கபாலி’க்கான டப்பிங், டீஸர் வெளியீடு, பட ரிலீஸ் என பரபரப்பான வேலைகள் போய்க்கொண்டிருக்க, இன்னொருபுறம் ‘எந்திரன் 2’க்கான வேலைகளும் பிஸியாக நடந்து கொண்டிருக்கின்றன. ‘2.0’ படத்திற்காக சமீபத்தில் 45 நாட்கள் டெல்லி ஸ்டேடியத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட படத்தின் மற்ற சில வில்லன்களும் கலந்து கொண்டனர். ரோபாவாக அக்ஷய்குமார் வித்தியாசமான தோற்றத்திலிருந்த புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

இந்நிலையில் ‘எந்திரன் 2’க்கான 3வது ஷெட்யூல் மே மாதம் முதல் வார இறுதியில் துவங்கும் எனத் தெரிகிறது. சென்னையிலுள்ள தீம் பார்க் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு ஈசிஆரில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்து, படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் சிலவற்றை படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். ரஜினி சம்பந்தப்பட்ட ‘கபாலி’ வேலைகள் முழுவதும் முடிந்துவிட்டதால், இனி முழுமூச்சாக ‘2.0’ படத்தில் கலந்துகொள்வார் என்று சூப்பஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;