அஜித், சிம்பு மீது எங்களுக்கு கோபம் இல்லை! - விஷால்

அஜித், சிம்பு மீது எங்களுக்கு கோபம் இல்லை! - விஷால்

செய்திகள் 28-Apr-2016 9:52 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் பொருட்டாக சமீபத்தில் சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணண் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது விஷாலிடம் அஜித் குறித்து கேட்ட ஒரு கேள்விக்கு விஷால் பதில் அளிக்கும்போது,
‘‘நாங்கள் திட்டமிட்டபடி நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணியை தொடங்குவதற்கு ஒரு தொகை கிடைத்துள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி விரைவில் துவங்கும். எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத அஜித்துக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கும் அவருக்கும் இடையில் பிரச்சனை என்று வருகிற செய்திகளை பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். ஒருவரை நாம் நிகழ்ச்சிக்கு அழைக்கிறோம் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு வருவதும், வராததும் அவரவர் விருப்பம்! அவரு ஒரு கொள்கையை வைத்திருக்கிறார். அதில் நாம் தலையிட முடியாது. கட்டாயப்படுத்தவும் முடியாது. இது என் வீட்டு நிகழ்ச்சி இல்லை! நடிகர் சங்கத்திலுள்ள உறுப்பினர்களின் நலனுக்காக தான் நாங்கள் பொறுப்புக்கு வந்தோம்! அதற்காக தான் நாங்கள் செயல்படுகிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வந்தவர்கள் மீது எங்களுக்கு அளவு கடந்த பாசமும் இல்லை; வராதவர்கள் மீது எங்களுக்கு கோபமும் இல்லை! ரஜினி, கமல், அஜித் போன்றோர்கள் மீது எங்களுக்கு எப்போதும் பாசம் உண்டு! அஜித்தை நான் பேர் சொல்லி கூப்பிடுவதாகவும், அவரை நான் சார் என்று அழைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் கூட வெளியாகியிருந்தது! நான் அவரை ஏன் சார் என்று அழைக்க வேண்டும்? அதற்கு அவசியமில்லை! ஏன் என்றால் அவர் எனக்கு நண்பர்!

அதைப் போலதான் நடிகர் சிம்புவும்! அவருக்கு ஒரு பிரச்சனை வந்தபோது நடிகர் சங்கம் அவருக்கு உதவவில்லை என்றும் சரியாக சர்வீஸ் செய்யவில்லை என்பது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். சரியாக சர்வீஸ் செய்ய இது ஆந்திரா கிளப்போ, லீக் கிளப்போ கிடையாது! இது நடிகர் சங்கம்! அவர், ’நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் நடிகர்களை கோமாளிகளாக்கினர்’’ என்று கூட சொன்னதாக தகவல் வந்தது. அவர் அப்படி சொன்னது தான் எங்களுக்கு வருத்தமாக இருந்தது. மற்றபடி எங்களுக்கு யார் மீதும் கோபம் கிடையாது! காரணம் நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம் மாதிரி’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;