இப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்று அல்லது நான்கு படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இவ்வாரம் வெள்ளிக்கிழமையும் 4 படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்திருக்கும் ‘மனிதன்’, ‘அருள் மூவீஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் அம்ஜத், லட்சுமி ப்ரியா நடித்திருக்கும் ‘களம்’, வெங்கட் சாமி இயக்கியுள்ள ‘கண்டேன் காதல் கொண்டேன்’, கே.மூர்த்தி கண்ணன் இயக்கியுள்ள ‘சாலையோரம்’ ஆகியவையே இந்த வார ரிலீஸ் களத்தில் இருக்கும் படங்கள்! இந்த 4 திரைப்படங்களும் உறுதியாக வெளியாகும் என்பதை யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. காரணம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சில படங்களின் ரிலீஸை திடீரென்று தள்ளி வைப்பதும் உண்டு!
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...