‘மனிதன்’ மெகா ரிலீஸ் பிளானில் உதயநிதி!

‘மனிதன்’ மெகா ரிலீஸ் பிளானில் உதயநிதி!

செய்திகள் 27-Apr-2016 11:25 AM IST Chandru கருத்துக்கள்

வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், தொடர்ந்து நடிகராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் உதயநிதியின் அடுத்த வெளியீடு ‘மனிதன்’. நீதிமன்றத்தை கதைக்களமாகக் கொண்டு சீரியஸாகவும், காமெடியாகவும் பயணிக்கும் இப்படம் ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக்காகும். ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கியிருக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். முதல்முறையாக உதயநிதிக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை படத்தை பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி.

தமிழ்நாடு முழுவதும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘மனிதன்’ படம் வெளியாகும் எனத் தெரிகிறது. குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவில் ‘தெறி’ படம் வெளியாகாததால், அந்த ஏரியாவில் பெரிய அளவிலான திரையரங்குகளை மனிதன் கைப்பற்றும். அதோடு ‘தெறி’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதாலும், கடந்த வாரம் வெளியான ‘வெற்றிவேல்’ படத்திற்கு ஓரளவே வரவேற்பிருப்பதாலும் ‘மனிதன்’ படம் கூடுதல் திரையரங்குகளை கைப்பற்றியிருக்கிறது என்கிறார்கள். ‘மனிதன்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதால், குடும்பத்துடன் படத்தை கண்டுகளிக்கலாம் என்பதும் படத்திற்கு கூடுதல் பலம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மனிதன் புதிய டிரைலர்


;