மே-6ல் இணையும் விஜய்சேதுபதி, லட்சுமி மேனன்!

மே-6ல் இணையும் விஜய்சேதுபதி, லட்சுமி மேனன்!

செய்திகள் 27-Apr-2016 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ‘ரெக்கை’ படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார் விஜய்சேதுபதி. அருண் விஜய் நடிப்பில் ‘வா டீல்’ படத்தை இயக்கியிருக்கும் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக ஜோடியாக நடிக்கவிருக்கிறார் லட்சுமி மேனன்! லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்த ‘ஜிகர்தண்டா’வில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்றாலும் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் ‘ரெக்கை’ தான். இப்படத்தின் பூஜை அடுத்த (மே) மாதம் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து இப்பட்அத்தின் படப்பிடிப்பு மே 11-ஆம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இந்த படத்தை விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த ‘காமன் மேன்’ பி.கணேஷ் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;