‘ரிச் மீடியா சொல்யூஷன்’ என்ற புதிய பட நிறுவனம் சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜூலியும் நாலு பேரும்’. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் சதீஷ் வி.ஆர். இந்த படம் குறித்து இயக்குனர் சதீஷ் கூறும்போது, ‘‘இது சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலை பற்றிய படம். அது மட்டு மின்றி இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்படும் காமெடி படமாகும். இதில் விஜய் டி.வி.புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அத்துடன் இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்த ஜூலி என்ற கதாபாத்திரத்தில் Beagle வகையை சேர்ந்த லக்கி என்ற நாயையும் நடிக்க வைக்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் நான் இயக்குனராக அறிமுகமாவதைப் போல ஒளிப்பதிவாளராக கே.ஏ.பாஸ்கரும், இசை அமைப்பாளராக ரகு ஸ்வரனும் அறிமுகமாகிறார்கள்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஜோசஃப்’. பத்மகுமார் இயக்கத்தில், ஜோஜு ஜார்ஜ் கதையின்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...