கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை நேற்று முன் தினம் வெளியிட்டிருந்தோம். இந்த பட அறிவிப்பு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் இப்படத்தில் தனுஷுடன் யார் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார், இப்படத்திற்கு யார் இசை அமைக்கப் போகிறார் போன்ற பல கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்துள்ளன! ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’ படத்தில் கதாநாயகியாக நடித்த லட்சுமி மேனனை இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தை இப்போது நடந்து வருகிறதாம்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...