மே 2ல் ஷூட்டிங், பொங்கலுக்கு ரிலீஸ் : ‘விஜய் 60’ பிளான்ஸ்!

மே 2ல் ஷூட்டிங், பொங்கலுக்கு ரிலீஸ் : ‘விஜய் 60’ பிளான்ஸ்!

செய்திகள் 26-Apr-2016 8:38 PM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்திற்குப் பிறகு தற்போது தனது 60வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கும் இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

ஏப்ரல் 11ஆம் தேதி ‘விஜய் 60’ படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. பின்னர் ‘தெறி’ பட புரமோஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் விஜய். மீண்டும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு மே 2ஆம் தேதி துவங்கவிருப்பதாகத் தெரிகிறது. விஜய்யின் ‘ஜில்லா’வைத் தொடர்ந்து இப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;