டைட்டானிக், அவதார் வசூலை நெருங்கும் ஸ்டார் வார்ஸ்!

டைட்டானிக், அவதார் வசூலை நெருங்கும் ஸ்டார் வார்ஸ்!

செய்திகள் 26-Apr-2016 7:50 PM IST Chandru கருத்துக்கள்

நம்மூரில் 100 கோடி, 200 கோடி வசூலுக்கே முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்குள் மல்யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஹாலிவுட்டில் சத்தமில்லாமல் 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி வசூல் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி உலகமெங்கும் வெளியான, ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படம், தற்போது வரை உலகளவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதித்திருக்கிறதாம். நம்மூர் கணக்கிற்கு கிட்டத்தட்ட 14 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த 2 பில்லியன் டாலர் வசூல் சாதனையை இதற்கு முன்பு செய்திருக்கும் படங்கள் இரண்டே இரண்டுதான். 1997ஆம் ஆண்டு வெளிவந்த டைட்டானிக்கும், அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படம் மட்டுமே ஏற்கெனவே இந்த சாதனையை செய்திருக்கும் படங்கள். உலகளவில் அதிக அளவில் வசூல் செய்திருக்கும் முதல் 5 படங்களின் பட்டியல் கீழே...

1. அவதார் (2009) - 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக 18 ஆயிரம் கோடி ரூபாய்)
2. டைட்டானிக் (1997) - 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக 15 ஆயிரம் கோடி ரூபாய்)
3. ஸ்டார் வார்ஸ் : தி ஃபேர்ஸ் அவேகன்ஸ் (2015) - 2 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக 14 ஆயிரம் கோடி ரூபாய்)
4. ஜுராசிக் வேர்ல்டு (2015) - 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக 11 ஆயிரம் கோடி ரூபாய்)
5. தி அவெஞ்சர்ஸ் (2015) - 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக 10 ஆயிரம் கோடி ரூபாய்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டைட்டானிக் - டீசர்


;