சூர்யாவின் ‘யாதும்’ மாத இதழ் வெளியீட்டு விழா!

சூர்யாவின் ‘யாதும்’ மாத இதழ் வெளியீட்டு விழா!

செய்திகள் 26-Apr-2016 4:32 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் நிறைய மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது தன்னெழுச்சியாக ஏராளமான தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்! அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ உருவாக்கிய ‘யாதும் ஊரே’ திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள அனைவரும் இணைந்து தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களும், செய்லபாடுகளும் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மக்கள் அனைவரிடத்திலும் சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘யாதும்’ எனும் மாத இதழை வெளியிட அகரம் ஃபவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க தமிழ் மொழியில் வெளியாகவிருக்கும் இந்த இதழின் முதல் பிரதியை வருகிற 28-ஆம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவிருக்கும் விழாவில் நீதி நாயகம் திரு.சந்துரு வெளியிடவிருக்கிறார். இந்த இதழ் குறித்த சிறப்புரையாற்றவிருக்கிறார் அகரம் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் நடிகருமான சூர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;