சிவா, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சிவா, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

செய்திகள் 26-Apr-2016 3:07 PM IST VRC கருத்துக்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’வில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படம் முடிந்ததும் மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை சென்ற மாதம் 11-ஆம் தேதி நடந்தது. இந்த இரண்டு படங்களையும் 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது. மோகன் ராஜா இயக்கும் படம் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘வேதாளம்’ முதலான படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படம் தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்! ‘ரெமோ’, மோகன் ராஜா இயக்கும் படங்களின் வேலைகள் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் முதலில் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பாரா, இல்லை ‘வீரம்’ சிவா இயக்கும் படத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;