‘ஜெயம்’ ரவியை இயக்கும் ‘ஈட்டி’ இயக்குனர்!

‘ஜெயம்’ ரவியை இயக்கும் ‘ஈட்டி’ இயக்குனர்!

செய்திகள் 26-Apr-2016 3:01 PM IST VRC கருத்துக்கள்

ரவி அரசு இயக்கத்தில், அதர்வா நடித்து சமீபத்தில் வெளியான ‘ஈட்டி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து ரவி அரசு, ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தை யார் தயாரிக்கிறார், யார் கதாநாயகியாக நடிக்கிறார், யார் இசை அமைப்பாளர் போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. இது சம்பந்தமான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜெயம்’ ரவி தற்போது ‘ரோமியோ ஜூலியட்’ பட இயக்குனர் லக்‌ஷமன் இயக்கத்தில் ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தவிர கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே ரவி அரசு இயக்கும் படத்தில் இணைவார் ‘ஜெயம்’ ரவி என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;