‘சுல்தான்’ படத்துடன் ரம்ஜானில் களமிறங்குகிறதா ‘கபாலி’?

‘சுல்தான்’ படத்துடன் ரம்ஜானில் களமிறங்குகிறதா ‘கபாலி’?

செய்திகள் 26-Apr-2016 11:43 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் தன் பங்கு டப்பிங்கை ‘கபாலி’யில் முடித்துவிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து வரும் மே 1ஆம் தேதி ‘கபாலி’ படத்தின் 1 நிமிட டீஸர் யு டியூப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘கபாலி’ படத்தை எந்த தேதியில் ரிலீஸ் செய்வது என்ற பேச்சுவார்த்தைகளும் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். படம் ஆரம்பித்த சமயத்தில் கோடை விடுமுறைக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் கலைப்புலி தாணு. ஆனால், ‘கபாலி’ படம் தொடங்கிய அதே சமயம் ரஜினியின் இன்னொரு படமான எந்திரன் 2ஆம் பாகமும் ஆரம்பமானது. இதனால் ‘கபாலி’ பட வேலைகள் முடிவதற்கு அதிக நாட்களானது.

தற்போது ‘கபாலி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மே 1ஆம் தேதி டீஸரையும், ஜுன் மாத முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், படத்தை ரம்ஜான் பண்டிகை தினமான ஜூலை 7ஆம் தேதி வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திடமிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதே நாளில் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் ‘சுல்தான்’ படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;