கவிஞர் காளிதாசனுக்கு விஷால் 25,000 உதவி!

கவிஞர் காளிதாசனுக்கு விஷால் 25,000 உதவி!

செய்திகள் 26-Apr-2016 11:37 AM IST VRC கருத்துக்கள்

சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி திருப்பத்தூரை சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன் (வயது-68). இவர் தமிழ் சினிமாவில் ‘தாலாட்டு’ என்ற படத்தின் முலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதினார். அதில் 1990-ல் பிரசாந்த் நடித்து, இசையமைப்பாளர் தேவா அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தில், ‘தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா…’ என்ற பாடல், ரஜினிகாந்த் நடித்த ‘அருணாசலம்’ படத்தில் ‘தலை மகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே…’ ஆகிய பாடல்கள் பிரபலமானது. தொடர்ச்சியாக நிறைய பாடல்கள் எழுதிய இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி, சிறுகனூர் அருகில் உள்ள SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஏழ்மையின் காரணமாக மருத்துவ செலவிற்கு கஷ்டபடுவதை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் அவருக்கு உடனடியாக தனது தேவி அறகட்டளை மூலம் 25, 000 ரூபாய் வழங்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;