இயக்குனர் கனவில் ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமி!

இயக்குனர் கனவில் ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமி!

செய்திகள் 26-Apr-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

தனது 2வது ரவுன்ட்டில் அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் அர்விந்த் சாமி. ‘தனி ஒருவன்’ சித்தார்த் அபிமன்யுவிற்கு கிடைத்த வரவேற்பு, இப்போது அடுத்தடுத்த படங்களில் அவரை பிஸியாக இயங்க வைத்துள்ளது. ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்திருக்கும் ‘போகன்’, தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் வில்லன், ஹிந்தியில் ‘டியர் டாட்’ என இந்தியாவெங்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகராக வெற்றிக்கொடி நாட்டிவிட்டாலும், இயக்குனராக வேண்டுமென்பதே அர்விந்த் சாமியின் நீண்டநாள் கனவாம். அதற்கு தற்போது இரண்டு கதைகளை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ் அல்லது ஹிந்தியில் இந்தக்கதைகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறார் அர்விந்த் சாமி. இனி... அர்விந்த் சாமி இயக்கத்தில் வருடம் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம் என்கிறது அவரின் நெருங்கி வட்டாரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;